எங்கள் அறக்கட்டளை பற்றி

மிகுமதி பொது தர்ம அறக்கட்டளை

மரியாதைக்குரிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்!

மனித வாழ்க்கை என்பது பல்வேறு காலச் சூழ்நிலைகள், எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளைக் கடந்து செல்லும் ஒரு பயணம். சூழ்நிலைகளின் காரணமாக ஒவ்வொரு மனிதரும் பல்வேறு வேதனைகளையும், கஷ்டங்களையும், சிரமங்களையும் எதிர்கொண்டு, தமது அன்றாட வாழ்க்கையையும் எதிர்கால நலனையும் எண்ணி வாழ்ந்து வருகின்றனர்.

அவ்வாறு வாழும் ஒவ்வொரு உயிரின் நிலையை அறிந்து, அதன் உணர்வுகளை மதித்து, வாழ்க்கைத் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கைத் தரமும் உயர்வதற்குத் தேவையான வழிகளை ஏற்படுத்துவதும், உடல் மற்றும் மன வேதனைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமைய உதவுவதும் எங்களின் அறப்பணியின் முக்கிய நோக்கமாகும்.

மனிதநேயம், அறம், தர்மம் மற்றும் இறைநெறியை அடிப்படையாகக் கொண்டு, தன்னைச் சார்ந்தவர்களையும் அறவழியில் பயணிக்கச் செய்து, தேவையுள்ளவர்களின் வாழ்வாதாரம் மேம்பட இயன்ற உதவிகளை வழங்கி, பொதுநலனுக்கான நற்பணிகளையும் நற்சேவைகளையும் தொடர்ந்து மேற்கொள்வதே மிகுமதி பொது தர்ம அறக்கட்டளையின் நோக்கமாகும்.

எங்கள் நோக்கம்

தேவையுள்ளவர்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கைத் தரமும் உயர, கல்வி, மருத்துவம் மற்றும் பொதுநல உதவிகளை இயன்ற அளவில் வழங்குவது.

எங்கள் தொலைநோக்கு

ஒவ்வொரு உயிரின் உணர்வுகளும் தேவைகளும் மதிக்கப்படும், வாழ்வாதாரமும் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து, நிம்மதியான வாழ்க்கை அமையும் சமூகத்தை உருவாக்குவது.

அறம் செய்வோம். மனிதநேயத்தை வளர்ப்போம். சமூக நலனை உயர்த்துவோம்.

பதிவு அலுவலகம்

No. 3/642, Ponmuchanthi
Usilampatty - 621312
Manapparai (TK), Trichy (DT)
Tamil Nadu, India

அறக்கட்டளை பதிவு எண்: 27/2026